தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில்முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் மற்றும் ஒவ்வொரு வார்டிலும் குறைந்தபட்சம் ஒரு இ-சேவை மையத்தை ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
"வணக்கம் நண்பர்களே, எங்களது நிறுவனம் 13 வருடங்களாக கணினி துறையில் மற்றும் மக்கள் சேவையில் நற்பணி ஆற்றுகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் 5 கிளைகள் கொண்ட நிறுவனம். அரசு சான்றிதழ்கள் தொடர்பான அனைத்து வகையான சேவைகளையும் நாங்கள் வழங்குகிறோம். பான் கார்டு, ஆதார் அட்டை, உரிமம், ரேஷன் கார்டு, வருமானச் சான்றிதழ், சமூகச் சான்றிதழ், பிறப்பு/இறப்புச் சான்றிதழ், பணப் பரிமாற்றம், கல்லூரிக் கட்டணம் செலுத்துதல், விண்ணப்பித்தல் மற்றும் திருத்தம் போன்ற சேவைகள். மத்திய மாநில அரசு காப்பீடு திட்டங்கள், மத்திய மாநில அரசின் மானிய லோன் அப்ளை செய்து தரப்படும்.அடையாள அட்டை அச்சிடுதல், ஆன்லைன் கட்டணங்கள், ஜிஎஸ்டி நிரப்புதல், பட்டா, சிட்டா & இசி மற்றும் பல சேவைகள் கணினியில் அனுபவம் வாய்ந்த நபர்களை வைத்து சரியான முறையில் செய்து தரப்படும். தயங்காமல் தொடர்பு கொள்ளவும்."